மலாவியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

பிளண்டைர்,

தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக மலாவி நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கின்றன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான பிளண்டைர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர். 11 பேரை காணவில்லை. ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், மலாவியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வரை விட்டு விட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like More from author