தேர்தல் நாளன்று தொழில் நிறுவனங்கள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளா் நலத்துறை

அனைத்து தொழில் நிறுவனங்களும், தேர்தல் நாளன்று கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில். மக்களவைத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் நாளன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும், வாக்குப்பதிவு நாளான 18-ஆம் தேதியன்று கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.

இல்லையெனில், சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனம் தொடா்பாக 98429-08287 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author