நடுவானில் கோளாறான ரஷ்ய ரக்கெட்: தப்பித்த விண்வெளி வீரர்கள்

ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது நடுவானில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் அவசரமாகத் தரையிறங்கினர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில். “கசகஸ்தான் நாட்டிலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் விண்வெளி வீரர்களுடன் இன்று (வியாழக்கிழமை) புறப்பட்டப்போது நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அந்த ராக்கெட்டில் பயணம் செய்த விண்வெளி வீரர்களான நிக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் ஆகியோர் சுமார் 2.30 மணியளவில் தரையிறங்கினர். இதனைத் தொடர்ந்து ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெசிஸ்கான் என்ற பகுதியில் மீட்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் மீட்கப்பட்ட விண்வெளி வீரர்கள் நலமாக இருப்பதாகவும், ராக்கெட்டின் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாகவும், ராக்கெட்டிலுள்ள பேலிஸ்டிக் வாகனம் மூலம் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியதாகவும் நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

இதனை ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

You might also like More from author