நான்காவது முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோகோவிக்… கெவின் ஆண்டர்சனை இறுதிப் போட்டியில் வீழ்த்தினார் Read more at: https://tamil.mykhel.com/tennis/novak-djokovic-beats-kevin-anderson-in-the-wimbledon-men-singles-finals-010945.html

விம்பிள்டன்: விம்பிள்டன் இறுதியில் கெவின் ஆண்டர்சனை எளிதாக வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிக் விம்பிள்டன் பட்டம் வென்றார். இது அவரது நான்காவது விம்பிள்டன் பட்டமாகும். இதோடு சேர்த்து, மொத்தம் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார், ஜோகோவிக். விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன், ஜோகோவிக் அரை இறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தினார். இரண்டு நாள்களில் ஐந்து மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், கடுமையான போராட்டதிற்குப் பின், நடாலை வீழ்த்தினார் ஜோகோவிக். அதே போல, மற்றொரு அரையிறுதியில் ஆண்டர்சன் ஆறரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இஸ்னரை வீழ்த்தினார்.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆண்டர்சன் இந்த தொடரில் சுமார் 21 மணி நேரம் விளையாடியதால், தன் முழு திறமையும் வெளிப்படுத்த முடியுமா? கடினமான இறுதிப்போட்டிக்கு உடல் ஒத்துழைக்குமா? என்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டது. ஆண்டர்சன் நேற்று தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆட்டம் துவங்கியது முதல், ஆண்டர்சன் தவறுகள் செய்ய, மறுபுறம் ஜோகோவிக் சிறப்பாக ஆடி முதல் இரு செட்களையும் 6-2, 6-2 என எளிதாக கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் தன் போராட்டத்தை துவங்கினார் ஆண்டர்சன். டை-பிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை ஜோகோவிக் கைப்பற்றி, இறுதிப் போட்டியை வென்றார். இந்த விம்பிள்டன் தொடர் தொடங்கும் போது, ஜோகோவிக் ஆண்கள் தரவரிசையில் 21வது இடத்தில இருந்தார். நடால் அல்லது பெடரர் ஆகியோரே விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உடைத்து, அரை இறுதியில் நடாலை வீழ்த்தி பட்டத்தையும் வென்றுள்ளார் ஜோகோவிக். கடந்த 2016ஆம் ஆண்டு US ஓபன் தொடரில் பட்டம் வென்றதோடு, காயங்களாலும், சிறப்பான பார்ம் இன்றியும் தடுமாறி வந்த ஜோகோவிக் இந்த விம்பிள்டனில், மீண்டும் தன் ஆதிக்கத்தை துவங்கியுள்ளார். நிச்சயம் பெடரர் மற்றும் நடாலின் டென்னிஸ் பயணத்தில் இனி ஜோகோவிக் குறுக்கிடுவார் என எதிர்பார்க்கலாம். ஜோகோவிக் இது வரை 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். தற்போது நான்காவது முறை பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெடரர் 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்று அதிக முறை விம்பிள்டன் பெற்றவர் என்ற சாதனை புரிந்து அசத்தியுள்ளார். தற்போது டென்னிஸ் ஆடிவரும் வீரர்களில் அவருக்கு அடுத்த இடத்தில், ஜோகோவிக் இருக்கிறார்.

You might also like More from author