நியூயார்க் டைம்:சிறந்த இடங்களில் ”ஹம்பி” 2-வது இடம்

உலகில் சுற்றி பார்க்க சிறந்த இடங்கள் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டு உள்ள பட்டியலில் உலகின் 52 முக்கிய இடங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் இந்தியாவில் இருந்து ஒரு இடம் மட்டுமே இடம் பெற்று உள்ளது.
அது கர்நாடக மாநிலம் ஹம்பி ஆகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகிய ஹம்பியில்  அழகிய பழங்கால கோயில்கள் மற்றும் அரண்மனை இடிபாடுகள் உள்ளன. நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ஹம்பி 2 வது இடத்தில் உள்ளது.
ஹம்பி 16 ஆம் நூற்றாண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் மரபு ஆகும். அதன் நன்கு பராமரிப்பு மற்றும் இங்குள்ள கல் கோயில்கள் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. 2017 சூறாவளிக்குப்பின் மீட்டெடுக்கப்பட்ட போர்ட்டோ ரிக்கோவின் கரீபியன் தீவு இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் ஹம்பியின் ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டு உள்ளது.

You might also like More from author