நெல்லை .ஜீவா அறிக்கை
தேசத்தின் ஒளிவிளக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள்…
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 62-வது நினைவுதினத்தில் நெல்லைஜீவா புகழ்வணக்கம்—
இந்திய விடுதலைக்கு பின் நாட்டின் முதல் சட்டஅமைச்சராக பதவிவகித்தவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
பட்டியல் ஜாதி மக்களுக்காக தனி இயக்கம் தொடங்கி பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமையை ஒழிக்க மிக கடுமையாக போராடினார்.
கொடிய சூழலில் பிறந்து, மோசமான வறுமையில் படித்து, படிப்பில் உலகில் எவரும் தொடாத சிகரத்தை அடைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
இளம் வயதில் கல்வி நிலையங்கள் –அரசியல் மேடைகள் ஆகியவற்றில் அம்பேத்கர் மாதிரி அவமானங்களையும்-போராட்டங்களையும் சந்தித்தது வேறு யாருமில்லை.
“ஆடுகளைத்தான் கோயில்களில் பலியிடுவார்கள்-சிங்கங்களை அல்ல எனவே நீங்கள் சிங்கங்களாக இருங்கள் என ஒடுக்கப்பட்ட மக்களை தட்டி எழுப்பியவர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே உரக்க சொன்னார் கற்பி.! ஒன்றுசேர்.!! போராடு.!!!
எப்போதும் எழுத்து-படிப்பு -ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடியல் போன்ற சிந்தனையிலேயே அவரின் காலம் கழிந்தது.
அரசியல்-சட்டம்-வரலாறு-தத்துவம்-பொருளாதாரம்-புரட்சி ஆகியவற்றில் உலகளவில் சிறந்து விளங்கியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
சட்ட மாமேதையாகவும்–புரட்சியாளராகவும் தன்னை தகவமைத்துக்கொண்டு–இந்தியாவின் ஒளிவிளக்காக திகழ்ந்த அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 62-வது நினைவுதினத்தில் அவரின் போராட்டங்களையும், சாதனைகளையும் நினைவுகூர்ந்து நெஞ்சம் நெகிழ்ச்சியோடு புகழ் வணக்கம் செலுத்துவோம்.