பட்டாசு வெடித்த 1,500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.
சென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது .
ஆனால், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 285 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், கோவையில் 184 பேர் மீதும், விழுப்புரத்தில் 160 பேர் மீதும், மதுரையில் 109 பேர் மீதும், திருவள்ளூரில் 105 பேர் மீதும், சேலத்தில் 100 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

You might also like More from author