பன்னீர்செல்வம் போல் ஆயிரம் பேரை பார்த்து விட்டேன் என் கை தூசிக்கு சமம் ஆவாரா?

முதலமைச்சர் ஜெயலலிதா இறந்துவிடுவார் என்று தெரிந்து புது அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்று சொன்னபோது பன்னீர் செல்வம் முதல் அனைவரும் என்னைத்தான் முதல்வராக பதவி ஏற்க சொன்னார்கள் என்று சசிகலா போயஸ் தோட்டத்தில் பேசினார்.

முதலமைச்சர் இறந்துவிடுவார் என்று அன்று இரவு  12 மணிக்கே தெரிந்து விட்டது. நான் அழுதுகொண்டே அனைவரையும் பன்னீர் செல்வம் உட்பட 5 அமைச்சர்களை அழைத்து  முதல்வர் இறந்துவிடுவார் என்ற நிலையை சொல்லி உடனடியாக அடுத்த அமைச்சரவை பதவி ஏற்கணும் ,

ஆகவே உடனடியாக கவர்னரை சந்தித்து உடனடியாக அடுத்த அமைச்சரவை பதவி ஏற்கணும்.

இருக்கிற அமைச்சர்கள் அப்படியே இருக்கட்டும் இப்போதைக்கு அடுத்த அமைச்சரவை பதவி ஏற்கணும்.

ஓபிஎஸ் முதல்வராக இருக்கட்டும் என்று சொன்னேன். அப்ப பன்னீர் செல்வம் முதல் அனைவரும் நீங்கத்தான் முதலமைச்சரா இருக்கணும் என்றார்கள். உங்களைத்தான் ஏற்றுகொள்வார்கள் என்றனர்.

நான் சொன்னேன் எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை. எனக்கு என் அக்கா கூட இருக்கணும் . அக்கா உடல்கூட இருப்பதுதான் முக்கியம்.

பின்னர் வேண்டுமானால் பார்த்து கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தேன். இதை செய்ததும் நான் தான். இதை நீங்க தெரிஞ்சுக்கணும் எனபதற்காக சொல்கிறேன்.

புரட்சித்தலைவர் உடல் நிலை சரியில்லாத போது அம்மாவை புரட்சித்தலைவர் கொண்டுவந்தார்.

அம்மா என்ன சொன்னாங்க தலைவர் இறந்தவுடன் சசி எனக்கு இந்த பதவி வேண்டாம் என்றார்கள்.  அமைச்சர்களாக இருந்த அத்தனை பேரும் சேர்ந்துகொண்டு ஒருத்தர் கூட குரல் கொடுக்கவில்லை.

அன்று மாலை உடல் அடக்கம் நடக்கப்போகுதுன்னு சொல்றாங்க. திடீர்னு உடலை தூக்கி கொண்டு உள்ளே சொல்றாங்க. யார் செய்தது.

மந்திரிங்க. பின்னர் உடலை தூக்கிட்டு வந்து ராணுவ வண்டியில் சேர்க்கிறார்கள்.

அம்மாவை கீழே தள்ளிவிட்டார்கள், நான் கீழே இருந்து அம்மாவை தாங்கி பிடிக்கிறேன். அப்ப மந்திரியாக இருந்த ஸ்ரீஇபால் அம்மாவை அடிக்க முயற்சிக்க போறாங்க அவங்களை அழைத்து போங்கன்னு சொன்னதை அடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம்.

அதன் பிறகு அம்மா சொன்னாங்க எனக்கு கட்சியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்னு சொன்னங்க. அப்ப நான் சொன்னேன் எல்லோருக்கும் முன்னாடி உங்களை அவமானப்படுத்திட்டாங்க நீங்க இருக்கணும்னு சொல்லி இருக்க வச்சி கூட இருந்தேன்.

நான் என்னன்னா அம்மா எப்படி தலைவருக்கு இருந்தாங்களோ அதே போல் அம்மா கிட்ட நான் இருந்தேன். கட்சிக்காரர்கள் கொடுத்த மனுவை படித்து அக்கா இதை செய்யுங்கன்னு கேட்டுக்குவேன். அதெஎ போல் கூட்டணி பற்றி பேசுவேன்.

நான் நினைச்சிருந்தா அன்னிக்கே முதலமைச்சரா ஆகியிருக்க முடியும். ஆனால் சட்டசபை நிகழ்ச்சியை பார்த்த பின்னர் என் மனதுக்கு பட்டுச்சி. இவரு அவர்கள் கூட ஒன்னா இருக்கிறார். அமைச்சர்கள் வந்து சொல்றாங்க நிலைமை சரியில்லைன்னு.

ஆனால் அன்று கடைசி நாள் நடந்த நிகழ்ச்சி தான் துரைமுருகன் என்ன சொன்னார் உங்களுக்கு நாங்கள் துணை இருப்போம் என்று சொன்னார். ஆனால் அவர் எங்ககிட்ட இவ்வளவு பேர் இருக்காங்க நீங்க என்ன சொல்றதுன்னு கேட்டிருக்கணும். ஆனால் செய்யவில்லை.

அதனால் நான் இறங்கிட்டேன். எனக்கு முதலமைச்சர் பதவி பற்றி எந்த எண்ணமும் இல்லை. ஆனால் பன்னீர் செல்வம் இப்படி செய்ததுக்கு பிறகுதான் நான் இப்படி முடிவெடுத்தேன். நான் எதற்கும் பயப்படவில்லை. இது போன்ற ஆயிரம் பன்னீர் செல்வத்த பார்த்துட்டு வந்துதான் உக்காந்திருக்கேன்.

எத்தனை ஆம்பள எதிர்கட்சியில் இருந்தாலும் ஒரு பொம்பள வாழ்ந்து காட்டுவேன். பன்னீர்செல்வம் போல் ஆயிரம் பேரை பார்த்து விட்டேன். என் கை தூசிக்கு சமம் ஆவாரா? இவ்வாறு அவர் பேசினார்.

You might also like More from author