பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் இருக்கும் – ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கூட்டணிக்காக எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர பாமக உள்பட யாரும் கூட்டணிக்கு வரலாம். அவர்கள் அனைவரும் வருக வருக.
ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் இருக்கும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்து தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் என்று கூறினார்.
குக்கர் சின்னம் தினகரனுக்கு வழங்கக் கூடாது என அதிமுக எதிர்ப்பதற்கான காரணம், அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு பொதுவான சின்னத்தை சட்டப்படி ஒதுக்க இயலாது என்பதற்காகவே.
அமமுகவை லெட்டர் பேட் கட்சியாக தான் பார்க்கிறோம். ஆர்கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பெற்ற தற்காலிக வெற்றி அமமுகவுடையது. சவால் விடுவதற்கெல்லாம் அமமுக தகுதியற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் சரிசெய்யப்படும். அதிமுக  உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முழுமையாக முடிந்த பின் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க எந்த நிர்பந்தமும் இல்லை என கூறினார்.

You might also like More from author