பள்ளி வேன் விபத்து; 2 குழந்தைகள் சேற்றில் சிக்கி பலி

கேரளாவில் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 6 குழந்தைகள் மற்றும் ஒரு ஆயா ஆகியோர் பள்ளி முடிந்ததும், பள்ளி வேனில் ஏறி சென்றனர். வேனை அனில்குமார் என்பவர் ஓட்டினார்.
சிறிதுதூரம் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பகவதியம்மன் கோவில் குளத்தில் பாய்ந்தது. சேறு நிறைந்த அந்த குளத்தில் சிக்கி ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் பலியானார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author