பவளமல்லி இலை: நிபா வைரஸ் நோய்க்கான மருந்து…!

Coral Jasmine- leaf, nibah, virus, disease, medicine ...!
இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும்.
இதன் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் கலந்து முறைக் காச்சலுக்கு தினம் இரு வேளை கொடுத்தால் குணம் காணலாம். இம்மர இலையைச் சுடுநீரில்  போட்டு நன்றாய் ஊறவைத்து நாள் ஒன்றுக்கு இரு வேளை குடித்து வர, முதுகுவலி, காச்சல் போகும்.
வயிற்றில் புழுக்கள் வெளியேற இவ்விலைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அத்தோடு தேன் கலந்து அருந்தினால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
மேலும், இதன் இலைகளை 200 கிராம் எடுத்து வந்து மண்சட்டியில் போட்டு பதமான அனலிலிட்டு வறுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக்  காய்ச்சி, இருதய வலுவற்ற குழந்தைகளுக்கும், இரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கும் அரை அவுன்ஸ் முதல் இரண்டு அவுன்ஸ் வரை நாள் ஒன்றுக்கு இரு வேளை  கொடுக்கு, குணம் பெறலாம்.
நிபா வைரஸ் பாதிப்பைப் பொறுத்தவரை அவற்றின் அறிகுறி குணங்களான சளி, காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் பவளமல்லிக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.
‘இதன் இளங்கொழுந்தை இஞ்சிச் சாற்றில் அரைத்து, தினமும் இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தீரும்; இதன் இலையை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து தினமும் இருவேளை கொடுத்து வந்தால் காய்ச்சலுடன் முதுகுவலியும் நீங்கும்’ என்றும் சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பவளமல்லி இலை கஷாயம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: பவள மல்லி இலை – 7, மிளகு – 2, எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் பவள மல்லி இலையின் சாறு எடுத்து அதை கொதிக்க வைத்து 100 மி.லி. ஆக காய்ச்சி, அதனுடன் மிளகு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உணவுக்கு முன் மூன்று வேளை பருகி வர நிபா வைரஸ் அழியத் தொடங்கும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன

You might also like More from author