பாரிசில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். சிலர், அருகில் உள்ள கட்டிடத்தின் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தீயை அணைத்த பின்னர் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது, 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author