புதிய சி.பி.ஐ இயக்குனர் விரைவில் அறிவிப்பு

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி  இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு மீது  கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
சி.பி.ஐ. இயக்குனர்   நியமனம் தொடர்பாக தொடரபட்ட வழக்கில் விரைவில் புதிய சி.பி.ஐ இயக்குனரை நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு புதிய சிபிஐ இயக்குனரை அறிவிக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று நடந்த 2-வது  கூட்டத்தில் எந்த முடிவும்  எடுக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழு புதிய சிபிஐ இயக்குனர் பதவிக்கு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்து உள்ளது. இதில் ஒருவர் புதிய சி.பி.ஐ இயக்குனராக தேர்வு  செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக்குழுவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.
நியமனக்குழு மூன்று பெயர்களை  சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு அனுப்பும் அதில் இருந்து  ஒருவரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவிக்கும்.
இந்த பட்டியலில் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர், ஜெனரல் ரஜினிகாந்த் மிஸ்ரா முன்னணியில் உள்ளார்.

You might also like More from author