புதுமல்லவாடி கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி வீடு வீடாக சென்று ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அக்.25- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுமல்லவாடி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் டெங்கு தீவிர கொசு ஒழிப்பு பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வீடுவீடாகச் சென்று நேரில் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கோகுலம் தெரு பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட் பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்றார். அப்போது வீட்டின் உரிமையாளரிடம் வீடுகளில் தண்ணீர் தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைக்கவேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மற்றொரு பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந்த தொட்டியில் இருந்து நீரை எடுத்து அதில் கொசு புழுக்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் இதுபோல் தண்ணீர் நீண்ட நாட்கள் தேங்கிவைக்க வேண்டாம் உடனே அப்புறப்படுத்துங்கள் எனவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது ஆட்சியரிடம் பொதுமக்கள் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வாரத்திற்குஒருநாள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்துஆணையாளர் பி.பி.முருகன் தனி அலுவலர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அழைத்து டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அரிகிருஷ்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியம்மாள் துரிஞ்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மீனாட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஏ.பாஸ்கர் சுகாதார ஆய்வாளர் டி.ஜெயக்குமார் ஊராடசி செயலர் எம்.ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

You might also like More from author