பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்று அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.8 ஆகவும், டீசல் விலை 7 காசுகள் உயர்ந்து ரூ.70.32-க்கு விற்பனையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author