பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்-கனிமொழி

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:
கடந்த 9 ஆண்டுகளாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருப்பது நியாயமற்றது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் முடிவுக்கு கட்டுப்பட்டே இருக்கும் நிலை நீடிக்கிறது.
சட்டம் இயற்றப்படும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திலும் கூட பெண்களுக்கும் சேர்த்து ஆண்களே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.
சபரிமலை உள்பட பல இடங்களில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தொடர்ந்து திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

You might also like More from author