ப்ளீஸ் பா குடிக்காதீங்கன்னு சொன்ன மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை

குடிப்பழக்கத்தை விடச்சொன்ன மகளை அவரது தந்தையே கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் யாதவ். இவரது மகள் சுஜாதா முண்டா (18). பிரதீப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மகள் சுஜாதா தனது தந்தையிடம் குடிப்பழக்கத்தை விடுமாறுதொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத பிரதீப் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று பிரதீப் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் சுஜாதா, தனது தந்தையிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பிரதீப், பெற்ற மகள் என்றும் பாராமல், சுஜாதாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரதீப் யாதவை தேடி வருகின்றனர்.

You might also like More from author