மண்ணச்சநல்லூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரசார் காந்திசிலைக்கு மாலை அணிவிப்பு

மண்ணச்சநல்லூரில்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரசார் காந்திசிலைக்கு மாலை அணிவிப்பு
மண்ணச்சநல்லூர்,அக்.
மண்ணச்சநல்லூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை மற்றும் காமராஜ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் தலைமையில் நகர தலைவர் அருணாசலம் முன்னிலையில் காந்திசிலை மற்றும் காமராஜ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தி சிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சேகர், தாயுமான், பழனியாண்டி, எத்திராஜ், ராஜலிங்கம், சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் மண்ணச்சநல்லூர் பேருராட்சி மற்றும் லயன்ஸ் சங்கம் சார்பில் காந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லயன்ஸ் சங்க தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் ஏகேடிஎன். ஆறுமுகம், பொருளாளர் அய்யாவு, முதன்மை உறுப்பி;னர் மோகன்ராஜ், பழனிவேல், பாலு, மாரியப்பன், கிச்சான், சுப்பையா, துப்பரவு ஆய்வாளர் புவனேஸ்வரி, வட்டார தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் வீதி வீதியாக சென்று தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பேருராட்சி பணியாளர்கள், சமுக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

You might also like More from author