விசுவாசம்: மதுரை தமிழ் பேசும் அஜித்…

சிவா டைரக்ஷனில் 4வது முறையாக அஜித் நடிக்கும் படம், விசுவாசம். முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்தது. கதைப்படி மதுரை பின்னணி என்பதால், மதுரை வட்டார வழக்கில் பேசி நடிக்கிறார், அஜித். கூடவே வரும் தாய்மாமன் கேரக்டரில் தம்பி ராமய்யா மற்றும் காமெடிக்கு யோகி பாபு, ரோபோ சங்கர் இருக்கிறார்கள்.

இமான் இசை அமைப்பில் பாடல்கள் ஒலிப்பதிவு முடிந்தது. விசுவாசம் படத்துக்கான தீம் மியூசிக்கும் தயாராக இருக்கும் நிலையில், இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் ராஜமுந்திரியில் தொடங்குகிறது. பிறகு மும்பை மாநகரில் நடந்து முடிகிறது. பாடல்களுக்காக வெளிநாடு செல்லும் திட்டம் இல்லையாம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி நடக்கிறது.

You might also like More from author