Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news மிஸ் இந்தியாவாக சென்னை கல்லூரி மாணவி தேர்வு...

மிஸ் இந்தியாவாக சென்னை கல்லூரி மாணவி தேர்வு…

மிஸ் இந்தியாவாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. 29 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்ட போட்டிகளில் தகுதி பெற்றனர். நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டியில், கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், சென்னையை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார்.

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் பயிலும் அனுக்ரீத்திக்கு மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

You might also like More from author