மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் – பா.ஜ., – திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல்!!

West -Bengal- Local -Elections - clash-between-BJP, Trinamoo- Congress

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் பா.ஜ., – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு கட்சி மோதல், வன்முறை சம்பவங்களால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பில்கண்டா பகுதியில் திரிணாமுல் கட்சியினர் கத்தியால் தாக்கியதில் பா.ஜ., ஆதரவாளர் தலையில் ஏற்பட்ட படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். முர்ஷிதாபாத் பகுதியில் ஓட்டுச்சாவடியை கைப்பற்றுவது தொடர்பாக பா.ஜ., – திரிணாமுல் இடையே நடந்த மோதலால் அங்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுச் சீட்டுகள் குளத்தில் வீசி எறியப்பட்டுள்ளன.

சதன்பூர் பகுதியில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிர்பாரா பகுதியில் திரிணாமுல் கட்சியினர் தாக்கியதில் 5 பத்திரிக்கையாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அசன்சோல் பகுதியில் வாகனங்கள் பலவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

You might also like More from author