ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி…

ஏ.டி.எம்., மெஷினுக்குள் புகுந்த எலி, 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து துவம்சம் செய்தது.

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., கடந்த ஒரு மாதமாக வேலை செய்யவில்லை. மே 20லிருந்து வேலை செய்யாமல் இருந்த இந்த ஏ.டி.எம்.,-ஐ சரி செய்ய, ஜூன் 11ம் தேதி வேலை ஆட்களை அனுப்பியது வங்கி நிர்வாகம். ஏ.டி.எம்.,-ஐ திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏ.டி.எம்.,க்குள் புகுந்த எலி ஒன்று, மெஷினில் நிரப்பப்பட்டிருந்த 2000, 500 ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து துவம்சம் செய்திருந்தது. எலி நடத்திய வேட்டையில், 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author