வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.
* நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னையில் ரூ. 2000 கோடி செலவில் மல்டி பார்க்கிங் கட்டிடம்  அமைக்கப்படும். அதில் 2 லட்சம் கார்கள், 4 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
* கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு

You might also like More from author