வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் கூறினார்.

மேலும், விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். ஆயுள் காப்பீடு மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1,031 கோடியும், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சமூக பாதுகாப்பு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.3,958 கோடி. 2,000 மின்சார பஸ்கள் வாங்கி, சென்னை, மதுரை, கோவையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கூறப்பட்டு உள்ளது.

You might also like More from author