வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை!!

Weather-forecast

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் வரும் 2 நாட்களில் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடலை ஒட்டிய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனக்கூறினார்.

கடந்த 24 மணிநேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 4 சென்டி மீட்டர் மழையும், உடுமலைப்பேட்டையில்  3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

You might also like More from author