விஜய் ரசிகர்களை தொடர்ந்து கொண்டாட்டத்தில் குதித்த தல ரசிகர்கள் – காரணம் இது தான்.!
விஜய் ரசிகர்களை தொடர்ந்து தல ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். இந்த திடீர் கொண்டாட்டத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக மிக பெரிய ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய்.
விஜய் நடிப்பில் இறுதியாக தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் என்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வந்தனர்.
தற்போது இவர்களுக்கு போட்டியாக தல ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர். அதற்கு காரணம் பில்லா பாண்டி. இதே தீபாவளி தினத்தில் தான் இப்படமும் வெளியாகி இருந்தது.
கே.சி பிரபாத் தயாரித்து இருந்த இந்த படத்தில் ஆர்.கே சுரேஷ் தல ரசிகராக நடித்திருந்தார். இந்துஜா, சாந்தினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லா பாண்டி 25-வது நாள் கொண்டாட்டத்திற்காக பல ஹேஸ்டேக்குகளும் அதே சர்கார் கொண்டாட்டத்திற்கு நிறைய ஹேஸ்டேக்குகள் சமூக வளையதளங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.