விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி: அண்ணா பல்கலை. பேராசிரியை உமாவிடம் ரகசிய விசாரணை

விடைத்தாள் மறுகூட்டலுக்கு லஞ்சம் வாங்கியதாக தொடரப் பட்ட வழக்கில் அண்ணா பல் கலைக்கழக பேராசிரியை உமாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2017 ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற, தோல்வி அடைந்த 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.

இந்நிலையில், மறுகூட்டலில் அதிக மதிப்பெண் போடுவதற்கு லஞ்சம் வாங்கியதாக கொடுக்கப் பட்ட புகாரின்பேரில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, பேராசிரியர்கள் விஜய குமார், சிவக்குமார், சுந்தரராஜன், மகேஷ் பாபு, அன்புச்செல்வன், பிரதீபா, பிரகதீஸ்வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீது லஞ்சம் வாங்குதல், கூட்டுச்சதி, மோசடி உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து 10 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பேராசிரியர் விஜயகுமார், உதவிப் பேராசிரியர் சிவகுமார் ஆகியோரை நேரில் அழைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். இதில், அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் உள் ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசார ணையில் சில முக்கிய தகவல் களையும், அதற்கான ஆதாரங் களையும் சேகரித்து வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவிடம் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்த தகவல் வெளி யில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறையின் முக்கிய அதிகாரி ஒருவரே நேரில் சென்று விசா ரணை நடத்தியிருக்கிறார்.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் எதுவும் சிக்காததால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர்.இதில் முக்கிய தகவல்களை சேகரித்து வந்திருப்பதாக கூறப்படுகிறது.

You might also like More from author