விண்வெளிக்குச் செல்லும் இந்தியர் யார்- இஸ்ரோ தலைவர்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டப்பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விண்வெளிக்கு செல்லும் இந்தியர் விமானி என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ‘ககன்யான்’ என்று பெயரிடப்பட்டவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்   திட்டத்தை 2021-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற இந்தியர்கள் விண்வெளிக்கு சென்றிருந்தாலும், அவர்கள் வெளிநாட்டு விண்வெளி மையங்கள் மூலமாகவே பயணம் செய்தனர்.இந்தியாவின் இஸ்ரோவே நேரடியாக தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.
இஸ்ரோவின் இந்த கனவுத் திட்டம் குறித்து அதன் தலைவர் கே. சிவன் கூறுகையில், “கன்யான் திட்டத்தின் மூலம், விண்வெளிக்கு மனிதர்களை வரும் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்ப திட்டமிட்டுள்ளேம். அதற்கான வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது. அவர்கள் பெரும்பாலும் விமானிகளாகவே இருப்பர்கள் என்பதால். இந்த தேர்வில் இந்திய விமானப் படை முக்கிய பங்காற்றும்.
இந்த திட்டத்துக்கு முன்னதாக வரும் ஆண்டுகளில் 2 ஆளில்லா விண்கலன்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். முதல் ஆளில்லா விண்கலனை வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது ஆளில்லா விமானத்தை 2021 ஆம் ஆண்டு ஜூலையிலும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இந்த ககன்யான் திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியை அடையும்” என கூறினார்.

You might also like More from author