வெடித்து சிதறிய மொபைல் போன்…

மும்பையில் நபர் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பாண்டுப் என்ற பகுதியில், நபர் ஒருவர்  உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அங்கு அவருடன் பலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நபரின் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனில் இருந்து புகை வந்து, பின் அது வெடித்து சிதறியது. அந்த நபர் உடனடியாக தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை தூக்கி வீசினார். அருகிலிருந்தவர்கள் மரண பயத்தில் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடினர்.
லேசான காயங்களோடு உயிர் பிழைத்த அந்த நபர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

You might also like More from author