317 பயணிகளுடன் ஹாங்காங் சென்ற விமானம் தைவானில் அவசரமாக தரையிறக்கம்

பெய்ஜிங்,

ஹாங்காங் நாட்டின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தைவானில் உள்ள கவுசிங் என்ற நகரில் இருந்து ஹாங்காங் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.02 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் 317 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில், விமானத்தின் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியானது. இதையடுத்து, உடனடியாக விமானம் அவசரமாக, புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச்சென்றது. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

என்ஜினில் இருந்து புகை வெளிவந்ததற்கான காரணம் குறித்து விமான பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்ட தகவலில் விமானத்தில் பறவை மோதியதே புகை வெளியானதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

You might also like More from author