ஒருநாள் போட்டி, டி 20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு: விராட் கோலிக்கு ஓய்வு?- ரிஷப் பந்த் தேர்வாக வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் நாளை ஹைதராபாத்தில் மோதுகின்றன. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி, மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. முதல் ஒருநாள் போட்டி வரும் 21-ம் தேதி குவஹாட்டியில் தொடங்குகிறது.

இந்த குறுகிய வடிவிலான தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. ஹைதராபாத்தில் இன்று கூடும் அணியின் தேர்வுக்குழுவினர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக அணியை தேர்வு செய்கிறார்களா அல்லது முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளார்களா என்பது நேற்று வரை தெளிவு படுத்தப்படவில்லை.

எதிர்வரும் ஆஸ்திரேலியத் தொடருக்காக விராட் கோலிக்கு ஒருநாள் தொடரில் இருந்து முழுமை யாகவோ அல்லது ஒரிரு ஆட்டங் களில் ஓய்வு அளிப்பது தொடர் பாக தேர்வுக்குழுவினர் ஆலோசிக் கக்கூடும் எனத் தெரிகிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார். இதேபோன்று தோனியின் பேட்டிங் பார்ம் குறித்தும் தேர்வுக்குழுவினர் ஆலோசிக்கக்கூடும். விக்கெட் கீப்பிங் பணியில் அவர் அபாரமாக செயல்பட்டு வருவதால் பேட்டிங் துறையில் அவரது இடத்தை நிரப்புவது குறித்தும் தேர்வுக் குழுவினர் முக்கிய முடிவு எடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை தோனி விளையாடுவார் என்பது அனை வருக்கும் தெரியும். அதேசமயம், ரிஷப் பந்த் வளர்ச்சிக்கும் எந்த தீங்கும் இல்லை. 6 அல்லது 7-வது இடத்தில் ரிஷப் பந்த் அபாயகர மான வீரராக இருப்பார். ஆட்டத்தை முடித்து வைக்கும் திறனும் அவரிடம் உள்ளது” என்றார்.

மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சமீபகாலமாக அணியில் இடம் பிடித்து வந்தாலும் அவரிடம் சீரான ஆட்டம் வெளிப்படவில்லை. மேலும் முக்கியமான கட்டங்களில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனிலும் அவர் பின்தங்குவது தேர்வுக்குழுவினரை கவலையடையச் செய்துள்ளது.

இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை குறித்தும் தேர்வுக்குழுவினர் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். கேதார் ஜாதவ், தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வருவதால் ஒருநாள் போட்டித் தொடருக்கான பரிசீலனையில் இல்லை. அவ்வவ் போது விளையாடும் லெவனில் இடம் பெறும் மணீஷ் பாண்டே மோசமான பார்மில் இருப்பதால் அவர் நீக்கப்படக்கூடும். அதே வேளையில் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கருதப்படுகிறது.

இதேபோல் அம்பதி ராயுடுவும் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வார். கோலி களமிறங்கினா லும் அம்பதி ராயுடுவின் இடம் பறிபோக வாய்ப்பில்லை. டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் குறுகிய வடிவிலான தொடர்களுக்கு திரும்ப ஆயத்தமாக உள்ளனர்.

You might also like More from author