பாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம் பாலினத்தவர்கள்

பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகையான 20 கோடி பேரில்,  10,418 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.  பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான தேர்தல் குழு சார்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இருக்கும் சமூக பங்களிப்பு குறித்து விவாதம் செய்யப்பட்டது.

அப்போது மூன்றாம் பாலினத்தவர்கள் 13 பேர் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 13 பேரில் 2 பேர் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

முன்னதாக, கடந்த திங்கள்கிழமையன்று வரும் ஜூலை 25 முதல் 27 வரை பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தால்  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்முறையாக மூன்றாம் பாலினத்தவர்கள் போட்டியிடப்போவது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறப்பு சமூக உரிமை ஆணையர் ஓமர் நஸீம் தெரிவித்ததாவது,

‘கடந்த முறை தேர்தலின் போதே மூன்றாம் பாலினத்தவர்கள் நான்குபேர் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் முறையான ஒப்புதலின்றி பங்கேற்றனர்.

இந்த முறை  உறுதியாக அவர்கள் தேர்தலில் பங்கேற்பார்கள். இந்த தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்கள்  வாக்களிக்க மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடவும் போகிறார்கள். எனவே அவர்களிடம் தேர்தல் ஆணையம் நட்பாக நடந்துகொள்ளும்’ என்றார்.

You might also like More from author