4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
4-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான அணியில் அஜிங்கிய ரஹானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாளை போட்டி தொடங்கும் போது, சூழலை பொறுத்து, களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது

You might also like More from author