400-வது கோலை பதிவு செய்தார் மெஸ்சி

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் விளையாடி வருகிறார். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா – எய்பர் அணி மோதின. இதில் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி ஒரு கோலும், சுவாரஸ் இரண்டு கோலும் அடித்தனர்.

இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்சி லா லிகாவில் 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில் ஒரே தொடரில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 507 போட்டிகளில் விளையாடி 409 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோ ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி நாடுகளில் உள்ள கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

You might also like More from author