தேர்தலை சந்திக்க அதிமுக தயார்: முதல்வர் பழனிசாமி

சேலத்தில் பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைத்த பின்னர், நேரு கலையரங்கில் மாணவர்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

ஒரு நாட்டின் உயர்வும், வளர்ச்சியும் கல்வியை சார்ந்துள்ளது. மாநிலத்தில் சிறந்த கல்வி இருந்தால் அமைதி நிலவும்.

தமிழகம் கல்வி தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக திகழ்கிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. தமிழகத்தில் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது.அரசு பள்ளிகளில் படித்தால் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது. செல்வத்தை எந்த வயதிலும் சம்பாதிக்கலாம். கல்வியை இளம்வயதில் தான் படிக்க முடியும். என்றார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகள் நடக்கிறது. நீர்மட்டத்தை உயர்த்தகூடாது என்பதற்காக கேரளா தவறான தகவலை பரப்புகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து முழுமையான கருத்துரு எட்டப்படவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க அரசு தயாராக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மீது விமர்சனம் செய்கின்றனர். பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளதால், மத்திய அரசிடமிருந்து தமிழகம் விருது பெற்றுள்ளது என்றார்.

You might also like More from author