அங்காளம்மன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை பேரவை தொடக்க விழா

சிறுகனூர் ஸ்ரீஅங்காளம்மன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர் பேரவை தொடக்க விழா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாணவர் பேரவை செயலாளர் அருணாச்சலம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்துராஜ் விழாவிற்கு தலைமை வகித்தார். மெக்கானிக்கல் துறை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கல்லூரி டீன் முனைவர் சைவராஜ் வாழ்த்துரை வழங்கினார். மணிகண்டன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கோவை ட்ரையாங்கில் இன்ஜினியரிங் நிறுவன நிர்வாக இயக்குநர் சுரேஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

துறைத்தலைவர்கள் கவியரசன், மதுரவேணி, சியாமளா, ஸ்ரீதேவி, சண்முகபிரியன், பிரசாத், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா முடிவில் வீரகுருநாதன் நன்றி கூறினா

You might also like More from author