அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு:அதிகாரி உமா சஸ்பெண்ட்

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களிடமிருந்து பேப்பருக்கு ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பேராசிரியை உமா மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு மூலமாக இதுவரை 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மறுகூட்டலின் போது உமாவின் பேச்சை கேட்காத ஆசிரியர்களை உமா, அதிரடியாக பணியில் இருந்து நீக்கிவிட்டு தனது ப்ராடு வேலைக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்களை மட்டுமே பணியில் அமர்த்தி இந்த ஹைடெக் ஊழலை செய்து வந்துள்ளார். இது சம்பந்தமாக உமா உட்பட பல பேராசிரியர்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமாகி உள்ளது . இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை  அமைச்சர்  கே. பி. அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

You might also like More from author