பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு!

anna-university-gives-3-day-extension-to-apply-for-be-online

பொறியியல் படிப்பிற்கான சேர்க்கைக்கு 3 நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கான கடைசி தேதி மே 30 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி மையங்களை நாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 10% விண்ணப்பங்கள் மட்டுமே உதவி மையங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன. 

இதற்கிடையில் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு காரணமாக, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

You might also like More from author