ஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு

தொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். எனினும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரனை முடிவில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 3600 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
காப்புரிமை விவகார வழக்கின் தீர்ப்பு குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பணத்தையும் தான்டிய விவகாரம் ஆகும். வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அதிம் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாச மற்றும் புதுவித சாதனங்களை வழங்குவதற்கென எங்களது குழுவினர் அயராது உழைக்கின்றனர். என தெரிவித்துள்ளது.
ஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.
காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

You might also like More from author