தண்ணீர் விடவில்லை என்றால் போராட்டம் – விவசாயிகள் சங்கம் பொதுப்பணிதுறைக்கு எச்சரிக்கை

கிருதுமால் நதியில் தண்ணீர் விடவில்லை என்றால் நான்கு வழிச் சாலையை மறித்து போராட்டம் செய்வோம் வைகை கிருதுமால் பாசன விவசாயிகள் சங்கம் பொதுப்பணிதுறைக்கு  எச்சரிக்கை
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள செய்தியாளர் அரங்கத்தில் வைகை கிருதுமால் நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருந்தது.,

div dir=”ltr”>மதுரை முள்ளிப்பள்ளம் பகுதியிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த நதியானது 4 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.,

 இதன் மூலம் சிவகங்கை, விருதுநகர்,ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 2  லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுவந்தனர்.,
இந்த நிலையில் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக கடந்த 60 வருடங்களாக மதுரை மண்டல பொதுப்பணித்துறை கிருதுமால் நதிக்கு  தற்போது வரை தண்ணீர் விடாமல் காலம் தாழ்த்தி வருகிறது, இது குறித்து விருதுநகர்,சிவகங்கை, ராமநாதபுரம்,மதுரை என நான்கு  மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.,
மேலும் இதுதொடர்பாக கிருதுமால்  பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கும் இதுவரை எந்த பலனும் இல்லை.,
எனவே இதனை கண்டிக்கும் விதமாக பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் வருகின்ற 8ம் தேதி மதுரை சிவகங்கை சாலையில் அமைந்துள்ள நான்கு வழிச்சாலையை 10000க்கும் மேற்பட்ட விவசாயிகள் க சாலை மறியல் மற்றும் பேருந்து மறியல் செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.,
 மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

You might also like More from author