திருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது .

 

இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் வருகையை ஒட்டி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் இருந்து 150க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பக்தர்கள் பாதுகாப்பிற்காக கூடுதல் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடலில் மிதவை தடுப்பு அமைத்து, காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like More from author