பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சின்ன வேளாங்கன்னி என்று அறியப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழக அளவிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

மாதாவை வழிபடும் கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் வேளாங்கன்னிக்கு பிறகு மிகவும் பிரசித்து பெற்றதாக இருப்பது பெசன்ட் நகர் மாதா கோயில். பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டு செல்கின்றனர்.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடக்கும் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டிற்கான மாதா கோயில் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

You might also like More from author