திருச்சியில் செல்போன் திருடனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

திருச்சி ஜங்ஷன் அருகே செல்போன் திருடனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர் திருச்சியில் 2 நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த செல்போனை ஒருவன் பறித்துச் சென்றான்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த நபரை தேடி வந்த நிலையில் அந்த பெண் அந்த செல்போன் திருடனை கண்டுபிடித்தார் கண்டுபிடித்துக் கூச்சலிட்டார் அப்போது மக்கள் ஒன்று சேர்ந்து அந்த திருடனை பிடித்தனர்

பின்னர் விசாரித்ததில் அவனுடைய பெயர் ராஜ்குமார் புத்தூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் என்றும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது இதனை அடுத்து பொதுமக்கள் அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்

You might also like More from author