தடை செய்யப்பட்ட 5 டன் குட்கா சென்னையில் பறிமுதல்

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. 

இந்த குட்கா விவகாரத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் துணை போனதாகவும் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. பூதாகரமாக மாறிவரும் இந்த குட்கா விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டவிரோத குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை நெமிலிச்சேரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் பலனாக 5 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்காவை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள், முத்து ராஜ், முத்து மனோகர் ஆகிய இருவர்ரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like More from author