புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த-ஐகோர்ட் உத்தரவு

சென்னை வடபழனியில் சில மாதங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டு, 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக்  ராமசாமி ஐகோர்ட்டில்  பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அவர் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
சென்னையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான மெரினா கடற்கரை மாசு பட்டுள்ளது.
எனவே வரும் புத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த வேண்டும். வரும் புத்தாண்டை நாம் தூய்மையான மெரினாவில் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் மெரினாவைத் தூய்மை செய்யும் பணியானது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

You might also like More from author