சிக்கன் ஃப்ரைடு மோமோஸ்

இமாலய பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்தால் , நீங்கள் தெருவிலும் கடைகளிலும் இந்த உணவை பார்த்திருக்கலாம். மோமோஸ்.. கிட்டத்தட்ட நம்ம ஊர் கொழுக்கட்டைதான். ஆனாலும், அதில் வேறு ஒரு வசீகரம் உள்ளது. இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் !!!
தேவையான பொருட்கள் :

மோமோஸ் மேல் மாவு செய்ய :

மைதா – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு ,
தண்ணீர் – தேவையான அளவு,
எண்ணெய் – சிறிது தேவையான அளவு .

மோமோஸ் உள்ளே வைக்கும் பூரணத்திற்கு :

கேரட் – 1/2 கப்,
பீன்ஸ் – 10,
கோஸ் – 1/2 கப்,
வெங்காயம் – 1/4 கப்,
சிக்கன் கைமா – 50 கிராம்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி – 2 துண்டு,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையானா அளவு ,
பொரிக்க எண்ணெய் – தேவையானா அளவு ,

செய்முறை:

மோமோஸ் மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத் தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். கோஸ், வெங்காயம்  சேர்த்து காட்டன் துணியில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பின்பு கொடுத்த மோமோஸ் பூரணத்திற்கான பொருட்களை சேர்த்து ஒன்றாக கலந்து  கொள்ளவும். பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக்கி சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் தேய்த்து பூரணத்தை வைத்து மூடி இட்லி  தட்டில் வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வேகவைத்த மோமோஸ்களை பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.

You might also like More from author