இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு

சீக்கிய மதகுரு குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூரில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தேரா பாபா நானக் புனித தலம் வரையிலான 4.7 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்திய சீக்கியர்கள் கர்தார்பூருக்கு புனித யாத்திரை செல்வதற்கு வசதியாக அமைக்கப்படும் இந்த சாலையின் அந்தந்த நாட்டு பகுதிகளை அந்தந்த அரசுகள் அமைக்கின்றன.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதை சீனா வரவேற்று உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு மந்திரி கெங் சுவாங் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த நல்ல தொடர்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு ஆசியாவின் முக்கியமான இந்த இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் நிலைத்தன்மை உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்தும்’ என்று பாராட்டினார். அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை, பிரச்சினைகளை சரியாக அணுகுதல் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த இரு நாடுகளாலும் முடியும் என உண்மையிலேயே நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You might also like More from author