ஈஸியான தேங்காய் பால் முட்டை குழம்பு !!!

முட்டை குழம்பையே பலவாறு செய்வார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் பால் சேர்த்து செய்யும் முட்டை குழம்பு. இந்த வகை முட்டை குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஏன் பேச்சுலர்கள் கூட இதனை செய்யலாம்.

இங்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று இப்பொழுது  பார்ப்போம் !!!

தேவையான பொருட்கள்:

முட்டை – 4
எண்ணெய் – 3 டீஸ்பூன்
இலவங்க பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
வெங்காயம் – 2 சிறியது
பச்சை மிளகாய் – 3
இஞ்சி-பூண்டு விழுது – 1 ½  டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 35௦ மில்லி
நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம் மற்றும் கொத்‌தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும். அதனுடன், நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை கலக்கவும். மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்.

உப்பு, 2 கப் தண்ணீர், தேங்காய் பால் சேர்க்கவும். வீட்டில் தயாரித்த தேங்காய் பால் சேர்த்தால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கடாயில் ஊற்றவும். மேலே உள்ள செய்முறையை எல்லா முட்டைகளுக்கும் பின்பற்றவும். முட்டையை ஒன்றின் மீது ஒன்று ஊற்றாமல் பார்த்துக் கொள்ளவும். மூடி வைத்து 4-5 நிமிடங்கள் சமைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவிடவும். ஈஸியான சுவையான
தேங்காய் பால் முட்டை குழம்பு ரெடி.

You might also like More from author