விஸ்வரூபம் – 2 திரைப்படத்தின் நீக்கிய காட்சிகள்

விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் படத்தில் இடம் பிடித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஸ்வ ரூபம் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

அப்போது விஷ்வரூபம் முதல் பாகத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளதாகவும், அது இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதால் படத்தை வெளியிடக் கூடாது என்று பல எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் 2-ம் பாகம்இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இந்தி வெர்ஷனில் 14 இடங்களில் வரும் காட்சிகளை சென்சார் போர்டு வெட்டியுள்ளது. படுக்கை அறையில்கமல் பூஜாகுமாருக்கு கொடுக்கும் உதட்டு முத்த காட்சியை சென்சார்போர்டு வெட்டியுள்ளது. அதற்கு பதிலாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் வெர்ஷனில் மொத்தம் 22 இடங்களில் வரும் காட்சிகளை வெட்டியுள்ளது சென்சார் போர்டு .

விஸ்வரூபம் 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் :

1.அஷ்மிதா என்ற கதாபாத்திரத்தை கொள்ளும் காட்சிகள். அதன்பிறகு சிதைக்கப்பட்ட அவரது உடல் இருக்கும் காட்சிகள் .

2. உமர் என்ற கதாபாத்திரம் ரத்த வாந்தி எடுக்கும் காட்சி.

3.டெல்லியில் இருக்கும் ஒரு இடத்தைபற்றிபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் இந்த காட்சி வரும்போது சத்தம் வராமல் அமைதியாக்கப்பட்டுள்ளது.

4. படத்தின் ஆரம்பத்தில் இந்தியில் பேசுப்படும் வாயிஸ் ஓவர்வெட்டப்படுள்ளது.

5.படத்தில் ஐஎப்எஸ் (IFS) என்றும் foreign service என்ற வசனங்கள் சத்தம் இல்லாமல் அமைதியாக்கப்பட்டுள்ளது.

6.மேலும் படத்தின் கதாநாயகி நிருபமா குளியலறையில் குளிக்கும்போது காட்டப்படும் காட்சி மற்றும் உதட்டு முத்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

7.எஸ்மிதா என்ற இஸ்லாமிய கதாபாத்திரம் ஃபர்தாவை கிழிக்கும் காட்சிகள் நீக்கப்படுள்ளது.

8.பாரத் மாதா கி ஜே’ என்று வசனங்கள் வரும் காட்சிகள் அமைதியாக்கப்படுள்ளது.

9. மேலும் ’அல்லா’ என்ற வசனங்கள் வரும் காட்சிகளும் அமைதியாக்கப்படுள்ளது.

You might also like More from author