அமெரிக்க ராணுவ மந்திரியை சந்திக்க வாஷிங்டன் சென்றார் நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவின் முதன்மையான ராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வாஷிங்டன் வந்தடைந்தார்.

வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யும் நிர்மலா, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் என் மாட்டிஸ்-ஐ சந்தித்துப் பேசுகிறார்.

அமெரிக்காவாழ் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்

You might also like More from author